துருக்கி ராணுவம் அதிரடி சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று குவிப்புசிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் துருக்கி ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரின் கொட்டத்தை ஒடுக்க கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அண்டை நாடான துருக்கி கடந்த 4 மாதங்களுக்கு முன் அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. அங்கு ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தும் துருக்கி ராணுவம், சிரியாவில் துருக்கியின் எல்லையையொட்டி அமைந்து உள்ள ஐ.எஸ். இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் துருக்கி ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களது முகாம்கள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.