ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் 5வது நாளாக நீடிக்கும் இளைஞர்களின் எழுச்சி: சென்னையில் 210 இடங்களில் போராட்டம்ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 5வது நாளாக இன்று நடக்கும் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். மேலும் சென்னையில் மட்டும் 210 இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் பொதுமக்கள் இன்று அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை உட்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் சுமார் 25 லட்சம் பேர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மெரினாவில் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் பேர் திரண்டதால் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தது. 4வது நாளாக நேற்று மெரினாவில் அதிகாலையில் இருந்தே இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் குவிய தொடங்கினர். இவர்கள் பெரும் திரளாக கூடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில், அதிக அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

இதேபோல் இன்றும் மெரினா கடற்கரையில் இளைஞர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் பொதுமக்கள் இன்று அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் காலை 8 மணியில் இருந்தே, சாரை சாரையாக மெரினா கடற்கரையை நோக்கி சைக்கிள், இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்துகளில் லட்சக்கணக்கில் ஒன்று கூடி வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்திக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் காரணமாக மெரினாவிற்கு செல்லும் சாலை முழுவதும் கடந்த 4 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களே போக்குவரத்தை சரி செய்து வாகனங்கள் தடையில்லாமல் செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர். எந்த வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் மெரினாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மெரினாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் நேற்று மாலை திடீரென மெரினாவிற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் தடுப்புகள் அமைத்து தடை செய்தனர். இருந்தாலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி போராட்ட களமான மெரினாவிற்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பல தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் அவர்களும் மெரினா வந்து மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒரு கட்டத்தில் இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டது. மெரினாவில் மட்டும் 10 லட்சம் பேருக்கு மேல் திரண்டனர். ஒரே இடத்தில் அனைவரும் ஒன்று கூடியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். மணல் பரப்பே தெரியாத அளவுக்கு காமராஜர் சாலை மற்றும் மெரினா கடற்கரை மக்கள் தலைகளாக காட்சியளித்தன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.