ஆப்கான் வெடிகுண்டு தாக்குதலில் 5 அமீரகத்தினர் உட்பட 56 பேர் பலி!இன்று ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் கவர்னர் அலுவலகம் மற்றும் காபுல் நகரின் பாராளுமன்றத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிக்குண்டு தாக்குதலில் 5 அமீரக தூதரக அதிகாரிகள் உட்பட 56 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், ஆப்கானிஸ்தானிற்கான அமீரகத் தூதர், கந்தஹார் கவர்னர் உட்பட பலர் காயமடைந்தனர்.

பல ஆண்டுகள் நடைபெற்ற போர்களாலும், தீவிரவாத தாக்குதல்களாலும், தீவிரவாத குழுக்களுக்கடையேயான சண்டைகளாலும், மேற்கத்திய நாடுகளின் சதிகளாலும் கந்தல் கந்தலாக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள், கல்வி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் கொல்லப்பட்ட அமீரக அதிகாரிகள்.

தாலிபான்களின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அமீரகத்தின் அரசு அலுவலகங்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

மொத்தம் 13 பேர் உயிர்துறக்க காரணமான கந்தஹார் கவர்னர் மாளிகை வெடிக்குண்டு தாக்குதலின் போது உயிர்நீத்த 6 அமீரக தூதரக அதிகாரிகளின் பெயர்கள் வருமாறு:

1. முஹமது அலி ஜைனல் அல் பஸ்தாகி
2. அப்துல்லா முஹமது ஈஸா ஒபைது அல்காபி
3. அஹ்மது ராஷித் சாலிம் அலி அல் மஜ்ரோஹி
4. அஹ்மது அப்துல் ரஹ்மான் அஹ்மது அல் துனைஜி
5. அப்துல் ஹமீது சுல்தான் அல் அப்துல்லாஹ் இப்ராஹிம் அல் ஹம்மாதி


Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.