டொனால்டு டிரம்ப் அதிரடி: ஈரான், ஈராக் உள்பட 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்ஈரான், ஈராக் உள்பட 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க அமெரிக்காவின் அகதிகள் மறுவாழ்வு திட்டத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இந்த விதிமுறைகளை குறைந்தது 120 நாட்களில் அமல்படுத்த டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியேறுவோர் நாட்டுக்கும், மக்களுக்கும், அச்சுறுத்தலாக இருக்க கூடாது என்பதால் அகதிகள் மறுவாழ்வு திட்டத்தில் கடுமையான விதிமுறைகளை நடைமுறை படுத்துவது அவசியம் என்று டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முஸ்லீம்களை குறிவைத்து எடுக்கப்படும் நடவடிக்கை என்று அமெரிக்க சமூக சுதந்திர ஒன்றியத்தின் நிர்வாக இயக்குநர் அந்தோணி ரோமிரோ, முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் நாடுகளை குறிவைத்து டிரம்பின் நடவடிக்கை அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளார். இந்த புதிய உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அமெரிக்க முஸ்லீம் நட்புறவு பேரவையின் சிக்காக்கோ பிரிவின் இயக்குநர் அகமது ரியாப் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.