குவைத்தில் இருந்து தினமும் சராசரியாக 80 வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றம் !குவைத்திலிருந்து கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தினமும் சராசரியாக 80 பேர் என சுமார் 29,000 வெளிநாட்டவர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குவைத் நாட்டில் குடியிருப்பு விதிகளை மீறி சட்டவிரோதமாக நடந்தோர், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டோர் மற்றும் கடும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்காக தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளோரின் ஆவண வேலைகள் விரைந்து 1 வார காலத்தில் முடிக்கப்பட்டவுடன் விமான டிக்கெட்டுகள் முன்பதிவுகள் செய்யப்பட்ட 3 நாட்களில் வெளியேற்றப்படுவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளியேற்றப்படுபவர்களில் இந்தியர்கள் 26 சதவிகிதம் பேரும், எகிப்தியர்கள் 22 சதவிகிதமும், பிலிப்பைன்ஸ் மற்றும் எத்தியோப்பியவர்கள் தலா 13 சதவிகிதத்தினரும், இலங்கையர்கள் 6 சதவிகிதமும், பங்களாதேசத்தினர் 5 சதவிகிதமும், இதர நாடுகளைச் சார்ந்த 5ல் ஒருவரும் நாடு கடத்தப்படுகின்றனர்.

தெருச் சண்டைகளில் ஈடுபடுவோர், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மற்றும் கடுமையான போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபடுவோர் யாரும் தப்பிக்க முடியாது எனவும் குவைத் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.