உத்திர பிரதேச தேர்தல்...பகுஜன் சமாஜ் கட்சியின் 97 முஸ்லீம் வேட்பாளர்கள் - கட்சி தலைவர் மாயாவதி.உத்திர பிரதேச தேர்தல்...
முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.
உ.பியில் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 11ம் முதல் மார்ச் 8ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் மாயாவதி. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 100 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் 36 வேட்பாளர்கள் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிக்கையில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் தேர்வு நடைபெற்று விட்டதாகவும் கூடிய விரைவில் அடுத்தடுத்து அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ள மாயாவதி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 97 இஸ்லாமிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.