இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் தாடி வளர்க்க அனுமதி!சிறுபான்மை இன மக்களை தங்களது பணியில் சேர ஊக்கமளிக்கும் விதமாக சீக்கியர்கள் மற்றும் இஸ்லாமிய அதிகாரிகளை தாடி வளர்க்க நியுயார்க் காவல்துறை அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை கடந்த புதன் கிழமை புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் முன்னிலையில் காவல்துறை கமிஷனர் ஜேம்ஸ் ஓ நீல் வெளியிட்டார்.
“நியுயார்க் நகரில் எங்களது துறையில் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள யார் வேண்டுமானாலும் அதில் இணைந்து கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் இந்த திருத்தத்தை நாங்கள் செய்துள்ளோம்.” என்று ஜேம்ஸ் ஓ நீல் தெரிவித்துள்ளார்.
தற்போது புதிதாக பணியில் சேர்ந்த 557 காவலர்களில் 33 பேர் முஸ்லிம்கள், 2 பேர் சீக்கியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நியுயார்க் நகர காவல்துறையில் தாடி வளர்ப்பது தடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் எழுதப்படாத சட்டமாக ஒரு மில்லி மீட்டர் நீளம் வரை தாடி வைத்துக்கொள்ள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போதுள்ள இந்த சட்டதிருத்தம், தாடி வைத்துக்கொள்ள விதிக்கப்பட்ட விதிகளை எதிர்த்து காவலர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் காரணமாக ஏற்பட்டுள்ளது.

மசூத் செய்யத் என்ற காவலர், பல வருடங்களாக மத காரணங்களுக்காக தாடி வளர்த்து வந்தார். ஆனால் அதனை அவரது உயர் அதிகாரிகள் அகற்ற கூறி உத்தரவிட்டுள்ளனர்.
அதனை மறுத்த மசூத் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த ஜூன் மாதம் இவரை மீண்டும் பணியில் அமர்த்தி தாடி தொடர்பான தடையினை மறு ஆய்வு செய்ய காவல்துறை ஒப்புக்கொண்டது.
இதே போன்று கடந்த 2013 யூதர் ஒருவரும் வழக்கு தொடர்ந்து தாடி வளர்க்க அனுமதி பெற்றார். பல வருட காலமாக காவல்துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியுயார்க் நகர காவல்துறையினரின் இந்த முடிவை பலரும் பாராட்டியுள்ளனர். தற்போது திருத்தம் செய்யப்பட்ட இந்த சட்டத்தில் அதிகாரிகள் மத காரணங்களுக்காக 1.27 சென்டிமீட்டர் நீளத்திற்கு தாடி வைத்துக்கொள்ளலாம்.
சீக்கிய அதிகாரிகளுக்கு காவல்துறையினரின் தொப்பிக்கு பதிலாக தலைப்பாகை அணியவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சில நாட்களுக்கு முன் முஸ்லிம் விமானப்படை அதிகாரிகள் தாடி வளர்க்க தடை வித்தித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.