சவூதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கசையடி, சிறை தண்டனை !சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதியின் பொருளாதாரமும் கனிசமாக வீழ்ந்தது. இந்த பொருளாதார நெருக்கடியால் சவுதி அரசின் பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்ததும் கட்டுமானத்துறையில் 80 வருடப் பாரம்பரியமிக்கதுமான பின்லாடின் குழுமம் (Bin Laden Group), லெபனான் பிரதமர் ஸாத் ஹரிரி அவர்களுக்கு சொந்தமான சவுதி ஓஜர் நிறுவனம் (Saudo Oger) போன்ற நிறுவனங்கள் தங்களின் ஒப்பந்தங்களை இழந்ததாலும் அரசிடமிருந்து பெறவேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக பெறமுடியாததாலும் தங்களின் ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பல மாதங்கள் சம்பளம் பெறதாநிலையில் உணவிற்கும் உறைவிடத்திற்கு பெரும் கஷ்டத்திற்கு உள்ளானதை தொடர்ந்து பொறுமையிழந்த வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் வன்முறையில் இறங்கி பொது சொத்தைக்களை சேதப்படுத்தியதுடன் கட்டுமான நிறுவனங்களின் பல பேருந்துகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

ஏராளமான தொழிலாளர்கள் தாமதமானாலும் தங்களின் சம்பளத்தை படிப்படியாக பெற்றுக் கொண்டு ஊர் திரும்பிய நிலையில் ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு என்ற சொல்லுக்கேற்ப வன்முறையில் ஈடுபட்டவர்களின் செயலால் இன்று அவர்கள் கடந்த 8 மாதங்களாக ஊருக்கு திரும்ப முடியாமலும் சிறை, கசையடி போன்ற தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

வன்முறை கடந்த 2016 மே மாதம் ஒன்றாம் தேதி நடந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள நீதிமன்ற தீர்ப்பின்படி சுமார் 49 தொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு தலா 300 கசையடிகளும் மற்றவர்களுக்கு 4 மாத சிறை தண்டனையும், சிலருக்கு 45 நாட்கள் சிறை தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எந்தெந்த நாட்டைச் சார்ந்தவர்கள், தண்டனை பெறுபவர்களின் சரியான எண்ணிக்கை போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.