கத்தாரில் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை அமுலுக்கு வந்தது!கத்தாரின் வேலைவாய்ப்பு விசா நடைமுறைகளை கவனித்து வந்த 'ஆட்சேர்ப்பு நிரந்தர குழு' (Permanent committee for recruitment) கலைக்கப்பட்டதை தொடர்ந்து நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சகம் (Ministry of administrative development, labour and social affairs - MADLSA) ஆன்லைன் வழியாக விசா விண்ணப்பங்களை பெறத் துவங்கியுள்ளது. இந்த புதிய நடைமுறை வேலையளிக்கும் நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் போன்றோரின் சிரமங்களை மட்டுப்படுத்தும் சிறந்த நடைமுறையாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையை தொழிலாளர் அமைச்சகம் (MADLSA) மற்றும் உள்துறை அமைச்சகத்தின் (MOL) கூட்டு தரவு தளம் மூலம் (Joint data base) இயக்கப்படும். விசா பெறுவதற்கு ஸ்பான்சரும் ஊழியரும் கையெழுத்திட்ட ஒப்பந்த நகல், அடிப்படை  தொழிலாளர் சட்டம் படி விண்ணப்பதாரர்  நிறுவனத்தின் கடமைகளை குறிப்பிட்டு விண்ணப்பிக்கப்படுபவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தொழிலாளர் அமைச்சகத்தின் பரிசீலனை மற்றும் பரிந்துரைக்குப் பின் உள்துறை அமைச்சகம் விசா வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ளும். அதுபோல் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விசா விண்ணப்பத்தின் அவ்வப்போதைய நிலை (Follow up the status) குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

Source: Gulf Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.