அமெரிக்காவில் பள்ளிவாசல் தீக்கிரை ! பெண்ணுக்கு அடி உதை !!அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் விக்டோரியா நகரின் இஸ்லாமிய மையமாக திகழ்ந்த பள்ளிவாசல் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மணிநேரம் கொழுந்துவிட்டு எரிந்த பள்ளி முழுவதுமாக சாம்பலாகியுள்ளது, வேறுஅசம்பாவிதங்கள், காயங்கள் குறித்து தகவல் இல்லை.

இந்த இஸ்லாமிய மையம் இனவெறியர்களின் பல தொடர் மிரட்டல்களுக்கு நடுவே இயங்கி வந்ததுடன் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒருவன் பள்ளிச்சுவற்றில் 'வெறுக்கிறேன்' ( Hate ) என்பதை குறிக்கும் வகையில் 'H8' என எழுதிச் சென்றிருந்தான். மேலும் சிலர் கடந்த வாரம் பள்ளியினுள் புகுந்து திருட்டிலும் ஈடுபட்டதாக இம்மையத்தின் தலைவர் ஷஹீத் ஹஷ்மி தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் டெல்டா விமான நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லீம் பெண் ஒருவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக தாக்கப்பட்டுள்ளார். நியூயார்க் நகர ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் பிஸ்னஸ் வகுப்பு லவுஞ்சில் தலையில் முக்காடிட்ட நிலையில் பணியிலிருந்தவரை உதைத்தும், நாற்காலியை பிடித்துத் தள்ளியும், அசிங்கமாக திட்டியும், துரத்தியுமுள்ளான் 57 வயதுடைய ரோட்ஸ் எனும் கிழட்டு நிற வெறியன்.

அந்தப் பெண் நான் என்ன தப்பு செய்தேன் எனக் கேட்டதற்கு 'நீ ஒன்றும் செய்யவில்லை தான் ஆனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை, உங்களை எல்லாம் ஒழித்துக் கட்டத்தான் டிரம்ப் அதிபராக வந்துள்ளான்' என பைத்தியம் பிடித்தவன் போல் கூச்சலிட்டுள்ளான். இறுதியாக, கைது செய்யப்பட்டுள்ள நிறவெறியன் ஜாமினில் செல்ல விரும்பினால் 30,000 டாலர் அல்லது 50,000 டாலர் சொத்துக்களை பிணையாக வைத்துச் செல்லலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Source: AFP / Msn & rt.com
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.