மீண்டும் "சந்நியாசி சாக்‌ஷியின்" முட்டாள்தனமான பேச்சு - தேர்தல் ஆணையத்திடம் புகார்



4 மனைவி உள்ளவர்கள் தான் மக்கள் தொகை உயர்வுக்கு காரணம் பாரதீய ஜனதா எம்.பி பேச்சால் சர்ச்சை

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 7 கட்ட மாக தேர்தல் நடைபெற உள்ளது.அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் முதல்-மந்திரி யாக இருந்த ஷீலா தீட்சித்தை உ.பி. முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து களத்தில் உள்ளது.

பாரதீய ஜனதா தலைவர்கள் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர்.பாரதீய ஜனதா எம்பி. சாக்‌ஷி மகராஜ் மீரட்டில் நடந்த ஒரு கோவில் திறப்பு விழாவில் கல்ந்து கொண்டு பேசும் போது நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு முஸ்லீம் சமூகம் தான் காரணம் என குற்றம்சாட்டி பேசி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் கூறியதாவது.

மக்கள் தொகை பெருக்கம் என்பது இந்துக்களால் இல்லை.நான்கு மனைவிகள் 40 குழந்தைகள் என்ற கருத்து ஆதரவாளர்களால் உயர்ந்து உள்ளது.என கூறினார்.

இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் இந்த் பேச்சுக்கு தேர்தல் ஆணியம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மிட்டல் கூறும் போது
சாக்‌ஷி மகராஜ் பேச்சு  சாதி மத அடிப்படையிலான தாக்குதலாகும். இது சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட உத்தரவை மீறுவதாகவும். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாங்கள்  தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். என கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.