ஊர்காவற்றுறை கர்ப்பினிப் பெண் படுகொலை முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டு விவகாரம். ஏன்?ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் படுகொலை இலக்காகி உயிரிழந்துள்ள விடயத்தை சமூக வலைத்தளங்கள் ஊடகங்கள் சில  செய்தி வெளியிடும் போது நடந்து கொண்ட விதம் இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் படுகொலை  விடயத்தை சமூக வலைத்தளங்கள் ஊடகங்கள் சில   முஸ்லீம் இளைஞர்களே மேற்கொண்டதாகவும் இரும்பு தொழில் ஆடு மாடு வாங்க வருகின்ற இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் தான் குறித்த சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது என தெரிவித்ததோடு யாழ் முஸ்லீம் இளைஞர்கள் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக முரணான தகவல்களை பதிய விட்டனர்.

இந்த செயற்பாட்டை திட்டமிட்டு தவறான தகவல்களை பதிந்தவர்கள்  தமிழ் கடும் போக்கு வாதிகள் சிலரும் வாங்குரோத்து அரசியல் வாதிகளும் ஆவர்.எனவே இவ்வாறான கீழ்த்தனமான பதிவுகளை இடுவதை தவிர்த்து உண்மை விடயங்களை வெளியிட முன்வர வேண்டும்.

மனித விழுமியங்களுடனும் அதற்கான பண்பாடுகளையும் மறைத்து இன நல்லிணக்கத்தை சீர்க்குலைக்க  இவ்வாறான சக்திகள் முயல்வதை கைகட்டி பார்த்து இருக்க முடியாது.

இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சகல தரப்பினரும் பொறுமையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண்  உயிரிழந்துள்ளமை தொடர்பாக சகோதரர்களான வட்டுக்கோட்டை பழைய நீதிமன்றத்தடி கரம்பகம் என்ற இடத்தைச் சேர்ந்த நாகேந்திரன் துஷியந்திரன் (வயது-30) இ நாகேந்திரன் துஷியந்தன் வயது -32) ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பட்டப்பகலில்  படுகொலை  செய்யப்பட்ட பெண்  7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 27)  என்பவராவார்.


                                                         பாறுக் ஷிஹான்-
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.