சவூதியில் பள்ளி இமாம்கள், பிரச்சாரகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!சவுதியில் இமாம்கள் மற்றும் இஸ்லாமிய போதகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இனி முறையாக மார்க்கத்தை பயின்று பட்டம் பெற்றவர்கள் மட்டுமே பள்ளி இமாம்கள் மற்றும் இஸ்லாமிய போதகர்களாக பணியமர்த்தப்படுவர்.

வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தும் வாய்ப்பை பள்ளி இமாம்கள் தன்னிச்சையாக பிறருக்கு மாற்றித்தர இயலாது, இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியை பெற்றாலே தவிர.

தொழுகைகள் நிறைவுற்றபின் யாரும் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியில்லாமல் பிரசங்கம் செய்ய முடியாது.

பள்ளிவாசல்களில் இனி எத்தகைய நன்கொடைகள் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், அதுகுறித்த துண்டு சீட்டுக்கள் விநியோகம் மற்றும் பள்ளி சுவர்களில் ஒட்டுவதற்கும் இமாம்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது.

இமாம்கள் தங்களுடைய உரைகளில் யார் மீதும் வெறுப்புணர்வை உமிழ்ந்தோ, பிற நாடுகளை சாடியோ, ஆட்களை சாடியோ, அரசியல் பிரச்சனைகள் மற்றும் பழங்குடியின மக்களை விமர்சித்தோ பேசுதல் கூடாது.

அதேபோல் இமாம்கள் மற்றும் பிரச்சாரகர்கள் தொழுகைக்கு வருவோரின் யாருடைய நிர்பந்ததிற்கும் பயந்தோ, பணிந்தோ தங்களுடைய மார்க்க உபதேசங்களை அமைத்துக் கொள்ளக்கூடாது.

மேற்காணும் புதிய வழிகாட்டுதல்களை மீறுவோர் மீது சம்பள குறைப்பு மற்றும் பணிநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும் என்றாலும் தண்டனை வழங்குமுன் இமாம்களுக்கு தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல போதிய வாய்ப்பு வழங்கப்படும்.

சவுதி அரேபியாவின் தலைமை இமாம் முப்தி. அப்துல் அஸீஸ் அல் ஷேக் அவர்கள் கூறும் போது, இமாம்கள் மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசுவதுடன் அவர்களின் தவறான நம்பிக்கைகளை களைவதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் நல்ல விஷயங்களை நோக்கி மக்களை ஈர்க்கும் வகையில் பேச வேண்டும் என்றும் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் முக்கியமான விஷயங்களை கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Source: Okaz / Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.