முஸ்லிம்களும் இனவாதப் பூதங்களும்!முஸ்லிம்கள் மீதான வன்முறைகளும் வம்பிழுத்தலும் இன்று நேற்று உருவான ஒன்றல்ல, அது பல தசாப்தம் தாண்டிய எச்சங்களாகும்.

காலத்திற்கு காலம் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளில் முஸ்லிம் சமூகம் பெரும்பங்காற்றி இருந்தாலும், அதுவே கடைசியில் முஸ்லிம்களின் உதவியுடன் ஆட்சி ஏறிய அரச தலைவர்கள், முஸ்லிங்களை முகத்தில் அரைந்த வரலாறுளாக அமைந்தது.

தன்னுடைய தனி ஆதிக்கத்தை கொண்டு கட்சியையும் ,நாட்டையும், நாட்டு மக்களையும் தமது அதிகார கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த தலைவர்களை அதிகமாக கண்டது இலங்கை அரசியல், அதனால் சிறுபான்மையர் சமூகம் வாங்கிய அடிகளும் அதிகம், சில தடயங்கள் கடந்த கால சம்பவங்கள் அதற்கான சான்றுகளாக தொக்கி நிற்கின்றன.

அந்த வகையில் ரனசிங்க பிரமதாசவின் ஆட்சியை மிகப்பெரிய உதாரணமாக கொள்ளலாம். அன்று நாட்டுக்கே மிக அச்சுறுத்தலாக இருந்த விடுதலைப் புலிகளுகளுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவிகளை வழங்கிய பிரமதாச அவர்கள் புலிகளுக்கு ஆயுதங்களையும் இதர பல சலுகைகளையும் வழங்கினார். அவர் வழங்கிய அந்த ஆயுதங்கள் வார்த்தைகளால் வடிவமைக்க முடியாத அளவுக்கு முஸ்லிம் சமூகத்தை விரட்டி விரட்டி புலிகள் சுட்டுத்தள்ள காரணமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் வடக்கு முஸ்லிங்களையும் இரவோடு இரவாக வெளியேற்றவும் காரணமாக இருந்தது. அதன் விளைவாக இன்றுவரை அந்த மக்கள் தமது இருப்பிடம் திரும்ப முடியாமல் பரிதவிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து வந்த சந்திரிக்கா அம்மையார் அவர்களின் ஆட்சியில் கூட முஸ்லிம் சமூகத்தை வேற்றுக் கண் கொண்டுதான் பார்த்தது, மாவனல்லை பகுதியே தீக்கிறையாக்கப்பட்டு கொத்துக் கொத்தாக முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய அம்மையாரின் அரசும் ராணுவமும் அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது, சமூக பற்றுள்ள இக்பால் என்ற இளைஞன் நடுத்தெருவில் நிர்வாணமாக்கப்பட்டு இராணுவத்தினராலேயே அடித்துக்கொள்ளப்பட்ட வரலாறு அவரது ஆட்சிக்கு கருப்புச் சரித்திரத்தை எழுதியது என்றே கூறலாம்.

அம்மையாரின் ஆட்சியை கவிழ்த்து ரனில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினோம். ஆனால் அவரும் கூட முஸ்லிம் சமூகம் கைசேதப்படும் நிலைக்கே எம்மை கொண்டுவந்து நிறுத்தி இருந்தார்.
விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுக்களின் போது முஸ்லிம்கள் இந்த நாட்டில் சிறு குழு என்று அவரது உடன்படிக்கையில் குறிப்பிட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வந்தேறு குடிகள் என்ற நிலையை உறுவாக்கினார். அதுமாத்திரம் இன்றி அவரது சமாதான உடன்படிக்கையின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் எதுவும் கூறப்படாதது புலிகள் முஸ்லிம்களை மேலும் அச்சுறுத்த காரணமாக அமைந்தது. மூதூரில் முஸ்லிம்கள் அன்று அனுபவித்த இன்னல், துன்பம் இரத்தத்தில் எழுதப்பட்ட வரலாறாகும். புலிகளின் கோரம் எந்தளவுக்கு இருந்தது என்றால் இலங்கை இராணுவம் பாதுகாப்பு படை புடைசூல வாழைச்சேனையில் முஸ்லிம் ஜனாஷாக்கள் இரண்டு பெற்றோல் ஊற்றி நடுவீதியில் எரிக்கும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியது. என பல துன்பியல் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளாக இவர்களது ஆட்சியில் பதிவு செய்யப்பட்டது.

அப்படிப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களின் ஆதரவு இன்றி ஆட்சி பீடம் ஏறிய மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களை பாதுகாக்க முன்வந்தார். மூதூர் முஸ்லீம்கள் புலிகளின் ஆயுதப் பசிக்கு இறையாகமல் தடுத்ததால் அதுவே புரையோடிக் கிடந்த யுத்தம் முடிவுக்கு வர மிக முக்கிய காரணமாக அமைந்தது. வாகரை,தொப்பிக்களை என முழுகிழக்கு மாகாணத்தில் இருந்தும் புலிகள் விரட்டியடிக்கப்பட்டு, கிழக்கை மீட்டு கிழக்கு முஸ்லிம்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தார். பின்னர் முழு நாட்டிலும் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு நாட்டை மீட்டெடுத்தார். அதன் காரணமாக முஸ்லிம்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

யுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளை காரணம் காட்டி மஹிந்தவை மேற்குலக நாடுகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல அழுத்தங்களை பிரயோகித்தனர் ஐ.நா சபை என்றும் சர்வதேச நீதி விசாரணை என்றும் மஹிந்த தனிமனிதனாக நின்று சர்வதேச சமூகத்திற்கு முகம் கொடுத்தார். இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டவர்கள், மஹிந்தவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற இனவாத பூதங்களை கொண்டுவந்து மீண்டும் முஸ்லிம்களை சீண்டினார்கள்.

ஆனால் முஸ்லிம்கள் நாங்கள் நன்றி மறந்தவர்களாக அவரை அடுத்தடுத்து வந்த தேர்தல்களிலும் தோற்கடித்தே வந்தோம். அதன் காரணமாக மஹிந்த முஸ்லிம்களின் மீது கொண்ட  நம்பிக்கை, அன்பு மாற்றமாகி வெறுப்பை முஸ்லிம் சமூகம் சம்பாதித்துக்கொண்டது என்று கூட கூரலாம். அதற்கு காரணமாக எமது சமூக அரசியல் தலைவர்களும் இனவாதிகளை கட்டவிழ்த்து விட்ட சதிகாரர்களுக்கு துணைபோனது மஹிந்தவை மேலும் கோபத்தை தூண்டுவதாக அமைந்தது எனலாம்.

இதன் காரணமாக அவரது ஆட்சியில் வெளியான இனவாத பூதங்களை கட்டுப்படுத்த மஹிந்த பின்வாங்கினார். என்பதையும் தாண்டி சர்வதேசத்திற்கு முஸ்லிம்கள் தன்னுடன் இல்லை என்ற செய்தியையும் தர்ம சங்கடத்தையும் நாமே மஹிந்தவுக்கு ஏற்படுத்தினோம் என்பது மிக நுணுக்கமாக அவதானித்தால் தெரியவரும், அதன் விளைவாக தன்னுடைய பதவிக் காலம் முடிவடைதற்குள் மீண்டும் ஒரு தேர்தலையாவது நடாத்தி சர்வதேசத்தின் அச்சுறுத்தலை முடக்க தன்பாலுள்ள குற்றச்சாட்டை அவர் நிராகரிக்க முற்பட்ட போது நாட்டில் கோரத்தாண்டவம் ஆடிய இனவாத பூதங்களால் அவர் மீண்டும் முஸ்லிம்கள் மத்தியில் நிராகரிக்கப்பட்டார். இனவாத சக்திகளையும் ஊடகத்தையும் தனக்குச் சார்பாக பயன்படுத்தியவர்கள் மஹிந்தவை ஓரம்கட்ட அதுவே சந்தர்ப்பமாக அமைந்தது.இன்று நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் மஹிந்தவின் சமஸ்தானத்தில் இருந்தவர்களே தவிர அங்கு வேறொருவரும் அங்கு இல்லை என்பதை நாம் எம் கண்ணூடாக காண்கிறோம். அன்று மஹிந் அரசாங்கத்தில் எங்களால் எதையும் பேச, செயல்படுத்த முடியாது என்றவர்கள் நல்லாட்சியிலும் மௌனித்து இருப்பதன் மர்மத்திரைக்கு பின்னால் நிச்சயமாக மஹிந்த இல்லை என்பதும் அவருடைய சமீப கால நடவடிக்கைகளும் எமக்கு எடுத்துக் காட்டுகிறது.

எனவே தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள், மஹிந்தவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கே இந்த மதவாத இனவாதிகளை கொண்டுவந்தனர் என்பது வெளிச்சமாக தெரிகிறது. இனிமேலும் நல்லாட்சி தொடர்ந்தால் முஸ்லிம்கள் நிலை என்னவாகும் என்பதைக்கூட சிந்திக்க முடியாத சிக்கள்களை ஏற்படுத்துகிறது.

எனவே முஸ்லிம் தலைமைகள் சமூக நலன்கருதி விரைவாக முடிவெடுக்க வேண்டிய அவசியத்தை வழியுறுத்தி நிற்கிறது.

அஹமட் புர்கான்...
கல்முனை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.