குவைத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரநிலை பிரகடனம்!குவைத், தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அல் மக்வா (Al Maqwa) எண்ணெய் வயலில் ஏற்பட்ட கசிவை தொடர்ந்து குவைத் தேசிய எண்ணெய் நிறுவனம் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் குவைத் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

குவைத் தினமும் 2.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதன் மூலம் உலகின் 6 வது பெரிய எண்ணெய் வள நாடாக திகழ்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட கசிவை தொடர்ந்து தீ பற்றி எரிந்தது மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் அல் அஹ்மதியா எண்ணெய் வயலிலும் எண்ணெய் கசிவு விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.