தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் ... சுப்பிரமணியன் சுவாமி.தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாதாம்; அப்படி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்கிறார் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி.

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தினால் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். இதை ஒரு கும்பல் அழிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதை ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றுதிரண்டு எதிர்த்து போராடி வருகிறது.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில் பாஜகவின் எம்பி சுப்பிரமணியன் சுவாமி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தினால் தமிழக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.


இதே சுப்பிரமணியன் சுவாமி ஜல்லிக்கட்டுக்காக உச்சநீதிமன்றத்தில் 11 பக்க மனுவையும் தாக்கல் செய்திருந்தார். தம்மை ஜல்லிக்கட்டு ஆதரவாளராக காட்டிக் கொண்டு இப்போது தமிழக அரசை கலைக்க வேண்டும் என கூறியிருப்பது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.