சவூதி தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவ தலைவராக ரகீல் ஷெரீப் தேர்வுதீவிரவாதத்துக்கு எதிராக போராடும் சவூதி தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சவூதி அரேபியா தலைமையில் 39 நாடுகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு என்ற தீவிரவாத தடுப்பு படையை அமைத்துள்ளது. துருக்கி, ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், வங்காள தேசம் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் இக்கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளனர்.

ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் செயல்படும் தீவிரவாத குழுக்களின் தாக்குதல்களை தடுப்பதும், தீவிரவாதிகளை வேட்டையாடுவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துகொண்டு அங்கு வெறியாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடுவது, இந்தப் படையின் தலையாய இலக்காகும்.

இந்தப் படையின் தலைவராக சமீபத்தில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் ராணுவ மந்திரி காஜா ஆசிப் வெளியிட்டுள்ளார்.

சவுதி நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள இந்த அமைப்பின் தலைமையகத்தில் ரகீல் ஷெரீப் விரைவில் பதவியேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.