துபாயில் இலவச பல் மருத்துவ முகாம்



துபாய் கோல்டு  சூக் மற்றும் அல் ராஸ் மெட்ரோ நிலையம் அருகில் அல் அப்ரா மருத்துவ நிலையம் உள்ளது. இந்த மருத்துவ நிலையத்தில் பல் மருத்துவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் நஜ்மா நசீர் பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்தவர்.அமீரகத்தில் வசித்து வரும் தமிழக மக்களுக்கு பல்லை பரிசோதித்து அதனை முறையாக பராமரிக்க வேண்டிய ஆலோசனைகள் குறித்து விளக்கி வருகிறார். எனவே பல்லை இலவசமாக பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகள் பெற விரும்புபவர்கள் 055 123 1952 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு பெற்று வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த புதிய ஆண்டில் பற்களை தூய்மையாக வைத்துக் கொள்ள இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.