இந்திய குடியரசு தினவிழாவையொட்டி துபாயில் ரத்ததான முகாம் !துபாய் ஈமான் அமைப்பு இந்திய குடியரசு தினவிழாவையொட்டி ரத்ததான முகாமை நடத்தியது. இந்த ரத்ததான முகாம் துபாய் தேரா சலாஹுத்தீன் மெட்ரோ நிலையம் அருகில் உள்ள அஸ்கான் ஹவுசில் நடைபெற்றது. துபாய் அரசின் ரத்தான மையத்தின் ஆதரவுடன் ரத்ததான முகாம் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ரத்ததான முகாமிற்கு ஈமான் அமைப்பின் தலைவரும், அரேபியா ஹோல்டிங்ஸ் குழுமங்களின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஹமீது யாசின் வரவேற்றார்.

இந்திய துணை தூதரகத்தின் தொழிலாளர் நலத்துறை அதிகாரி என்.கே. நிர்வான், துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரி பழனிபாபு, வர்த்தப் பிரமுகர் சுல்தான், சமூக ஆர்வலர் இம்ரான் முஜீப், தமிழ் 89.4 எப்.எம். நிம்மி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.

இந்த முகாமில் தமிழக மாணவர்கள் ஹாத்திம் மௌலானா தலைமையில் வைட்டமின் டி, புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தினர். அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்ததான முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முகாம் சிறப்புடன் நடைபெற ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், துணைப் பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், செயலாளர்கள் காதர், பைஜுர், யாகூப், சமீம், செயற்குழு உறுப்பினர்கள் காமில், பரக்கத், சபீக் ரஹ்மான், நஜும் மரைக்காயர், சமீம் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனShare on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.