“இஸ்லாமியர்களை அமெரிக்கா விரட்டினால் கனடா வாருங்கள்!”அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள 7 இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான தடை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு.  தனது டுவிட்டர் கணக்கில் இப்படி கூறியுள்ளார். ” போர், தீவிரவாதம், பாதிப்புகளில் இருந்து தப்பித்து பிழைக்க வருபவர்களை கனடா மக்கள் வரவேற்பார்கள்.

உங்களது மத நம்பிக்கையை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம். (எந்த மதத்தினராக இருந்தாலும் வரவேற்போம்). பன்முகத் தன்மையே நமது வலிமை. welcomecanada, ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என்பதற்கு ஏற்ப கனடா மக்கள் தங்கள் பிரதமரின் அறிவிப்பை ஒருமனதாக வரவேற்றுள்ளனர். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில், 1லட்சத்து 50 ஆயிரம் பேர் அவரது போஸ்டிற்கு லைக் கொடுத்துள்ளனர்.

அவர் உருவாக்கிய welcometocanada என்ற ஹேஸ்டேக் கனடாவில் டிரென்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.