முதல் உரையிலேயே இஸ்லாமிய பயங்கரவாதத்தை இழுத்த டொனால்ட் டிரம்ப்.இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன் என டொனால்ட் டிரம்ப் தனது ஜனாதிபதிப் பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய கன்னியுரையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப்  நேற்றிரவு ( இலங்கை நேரப்படி) பதவியேற்றுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக மைக் பென்ஸ் உம் பதவியேற்றுள்ளார்.

தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதனை உரிய முறையில்  நிறைவேற்றுவேன் எனவும் உறுதியளித்தார் எனவும் சர்வதேச ஊடகங்கள அறிவித்துள்ளன.

டிரம்பின் பதவியேற்பு நிகழ்வுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜிமீ காடர், ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் பில் கிளின்டன் ஆகியோர் தனது மனைவிகள் சகிதம் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலரி கிளிண்டனுக்கு டிரம்பினால் விசேட அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன் என டொனால்ட் டிரம்ப் தனது ஜனாதிபதிப் பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய கன்னியுரையில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.