முத்துப்பேட்டை பிரமுகரிடம் மும்பை போலீசார் விசாரணை ஏன்?முத்துப்பேட்டை பகுதியில் முகாமிட்டுள்ள மும்பை போலீசார் முக்கிய பிரமுகரை விசாரணைக்கு அழைத்து சென்றதால்
பரபரப்பு நிலவுகிறது. திருவாரூர்  மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தான்  இன்ஸ்பெக்டர் கண்ணையன்  தலைமையில் போலீசார் கோவிலூர் பகுதியில் கடந்த 8ம் தேதி  ரோந்து பணியில்  ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கோவிலூர்  கிராமத்திற்குள் புகுந்த காரை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். காரில்  வந்த 3 பேர் திடீரென காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பி ஓடினர்.  இருவர் இருட்டில் மாயமானார்கள். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.
விசாரணையில் கார் கேரளாவை சேர்ந்தது என்றும், பிடிபட்ட நபர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சகாதேவன் மகன் சதீஷ்(34) என்றும்  தெரிய வந்தது. பின்னர் காரையும், பிடிபட்ட நபரையும் போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் நேற்று இரவு மும்பை மற்றும் மகாராஷ்டிரா போலீசார் 10 பேர் முத்துப்பேட்டைக்கு வந்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தலைமையில் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மணல்மேட்டுக்கு சென்ற அவர்கள் முக்கிய பிரமுகர் வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்த முக்கிய பிரமுகரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்று உள்ளனர்.

எதற்காக அவரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரியாததால் அவரது குடும்பத்தினர்  குழப்பத்தில் உள்ளனர். எதற்காக மும்பை மற்றும் மகாராஷ்டிரா போலீசார்  முத்துப்பேட்டைக்கு வந்து உள்ளனர். மர்ம காரில் வந்தவர்கள் குறித்து  விசாரணை நடத்தவா அல்லது வேறு ஏதும் காரணமா என அப்பகுதியில் பரபரப்பு  நிலவுகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.