ஞானசார தேரருக்கு போலீசார் கிடுக்கி பிடிநினைவுள்ளதா சில வருடங்களுக்கு முன்னர் ஞானசார தேரர் அதிவேக பாதையில் தகாத வார்த்தையில் ஏசியது... இப்பொழுது கிடுக்குப்பிடி போட்டனர் போலீசார்

பெளத்த தேரர்  கலகொட அத்தே ஞானசார தேரரின் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் காணொளிப்பதிவு ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் இணையத்தில்  வெளியிடப்பட்டது அனைவரும் அறிந்ததே..

கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம், பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து சிங்கள மொழியில் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தினார்.

பொலிஸ் அதிகாரிகள் கடமையில் இருந்த போது அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி, தெற்கு அதிவேகப் பாதையில் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டுள்ளார்.

இந்த அத்துமீறிய செயல் தொடர்பில் ஞானசார தேரர் உள்ளிட்ட மூன்று துறவிகளுக்கு எதிராக ஹோமாகம பொலிஸார் நேற்றைய தினம் குற்றப் பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஹோமாகம நீதவான் நீதிமன்றிலேயே இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, துறவிகள் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளமை காணொளிப்பதிவு மூலம் வெளியாகியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.