சவூதியில் தீவிரவாதி என கொல்லப்பட்ட மகனுக்காக இரங்கலை ஏற்க மறுத்த தந்தை !சவுதி அரேபியா தலைநகர் ரியாத் மாநகரின் வடக்கு அல் யாஸ்மீன் மாவட்டத்தில் வசிப்பவர் சாலம் பின் யஸ்லாம் அல் சயாரி, இவருடைய மகன் தாயியா மற்றும் இவரது கூட்டாளி தலால் பின் அல் சம்ரான் அல் சயீதி ஆகியோரை சனிக்கழமையன்று தடை செய்யப்பட்ட பயங்கர ஆயூதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த போது சவுதி பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் தனது மகனின் மரணத்திற்காக இரங்கல், அனுதாபம் தெரிவிப்பதை ஏற்க மறுத்துள்ளார் சுட்டுக்கொல்லப்பட்ட தாயியாவின் தந்தை. என் மகன் வழிதவறி சென்றுவிட்டான், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிராகவும், நாட்டிற்கு எதிராகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும், தீவிரவாதத்திற்கு எதிரான என்னுடைய அறிவுரைகளை ஏற்க மறுத்ததாலும் அவனுடைய இறப்பிற்காக எங்கள் குடும்பம் இரங்கப்போவதுமில்லை, பிறரின் அனுதாபத்தையும் ஏற்கவும் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நியூஸிலாந்து நாட்டிற்கு படிப்பதற்காக சென்ற தனது மகன் விடுமுறையில் வீட்டிற்கு வராமல் நேராக சிரியா சென்றதாகவும் பின்பு நாடு திரும்பிய நிலையில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் வீட திரும்பாததால் தாயியாவின் நடவடிக்கைகள் குறித்து சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றதே தந்தை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உங்களுடைய பிள்ளைகளின் போக்குகளில் வித்தியாசமான மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்தால் அதை உடனே பாதுகாப்பு துறைக்கு தெரிவித்தால் அவர்களுக்கு ஆரம்பநிலையிலேயே தேவையான நல் ஆலோசணைகளை கூறி மீண்டும் அவர்களை உங்கள் குடும்பத்துடன் சேர்க்க ஏதுவாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.