மத்திய கிழக்கின் முழு அழிவுக்கும் அமெரிக்காவே காரணம் ..டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்களுக்கு எதிரான சிறந்த தற்காப்பு என்பது ஐரோப்பிய ஒற்றுமைதான் என்று ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது குறித்து புகழ்ந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

 ஐரோப்பா தனது சுய அடையாளத்திற்காகவும், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான கொள்கைகளுக்காகவும் போராட வேண்டும் என்று மெர்கல் கூறியுள்ளார்.

ஒரு மில்லியனுக்கு அதிகமான குடியேறிகளை ஜெர்மனிக்குள் நுழைய அனுமதித்தது பேரழிவு ஏற்படுத்தும் தவறு என்று கூறிய டிரம்பின் கருத்துக்கு ஜெர்மன் துணை சான்சலரான சிக்மர் கேப்ரியல், கடுமையான பதிலுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கின் முழு அழிவுக்கும் காரணம் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கர்களின் நடவடிக்கையானது குடியேறிகள் நெருக்கடியை ஏற்படுத்தியதாக கேப்ரியல் தெரிவித்துள்ளார்.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.