நாகூரில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு: இந்திய தேசிய லீக் அறிவிப்பு..!தடையை மீறி நாகூரில்  இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் ஆபுமு நிஜாமுதீன் கூறினார்.

இதுதொடர்பாக நாகூரில் செய்தியாளர்களை சந்தித்த நிஜாமுதீன், ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் தடை விதித்திருப்பது தமிழர்களின் மரபுகளை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜகவினர் கூறி வருவது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் கூறினார்.

தடையை மீறி நாகூரில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் நிஜாமுதீன் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.