குவைத்தில் பறவைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் !சவுதியில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்கி கொண்டுள்ள அதேவேளையில் அதன் அண்டை நாடான குவைத்தில் H5N8 என்ற புதிய வகை தொற்று வைரஸ் வாத்துக்கள், வான்கோழிகள் போன்ற பறவையினங்களை தாக்கி வருவதாக மிருகங்களுக்கான உலக சுகாதார அமைப்பு (World Organisation for Animal Health - OIE) தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் 144 பறவைகள் 'அல் ஜராஹ்' (Al Jarah) பிரதேசத்தில் இறந்துள்ளதாகவும், மனிதர்களை பாதித்த செய்தியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஐரோப்பியா மற்றும் ஆசியா நாடுகளை சேர்ந்த சுமார் 40 உலக நாடுகளில் பலவகையான பறவை காய்ச்சல் வைரஸ்கள் (Different strains of bird flu) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் சீனாவில் மட்டுமே ஒருவர் பறவை காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

Source: Arab Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.