திரு குரானும் அறிவியலும்: சிந்திப்பதற்கு சில ......களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.368
திருக்குர்ஆன் 23:12

பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.
திருக்குர்ஆன் 23:13

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்.பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம்.அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
திருக்குர்ஆன் 23:14

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.
திருக்குர்ஆன் 23:18

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்!
திருக்குர்ஆன் 23:21

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 23:62

எனினும் அவர்களின் உள்ளங்கள் இதைப் பற்றி கவனமற்று இருக்கின்றன. இது அல்லாத ஏனைய செயல்கள் அவர்களுக்கு உள்ளன. அவற்றை அவர்கள் செய்கின்றனர்.
திருக்குர்ஆன் 23:63


முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
திருக்குர்ஆன் 23:100

இன்று அபயக் குரல் எழுப்பாதீர்கள்! நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 23:65

எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்பட்டு வந்தன. அப்பொழுது புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.
திருக்குர்ஆன் 23:66

அவனே உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
திருக்குர்ஆன் 23:78
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.