இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு படையின் இணையதளத்தை முடக்கிய ஹாக்கர்கள்இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு படையின் இணையதளத்தை பாகிஸ்தான் ஆதரவு ஹாக்கர்கள் முடக்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. www.nsg.gov.in என்ற இந்த இணையதளம் ஞாயிறு அன்று அடையாளம் தெரியாத நபர்களால் ஹாக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹாக்கர்கள் அப்பக்கத்தில் ஆபாச வார்த்தைகளையும் மோடியை குறித்து தரக்குறைவான கருத்துக்களையும் பதிந்துள்ளதாக தெரிகிறது.

தங்களை Alone Injector என்று கூறிக்கொள்ளும் இந்த ஹாக்கர்கள் பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர்களாக இருக்கலாம் என்று அதிகாரவட்டத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதனை செய்தவர்கள் யார் என்ற விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பூனை படைக்கு சொந்தமான இந்த இணையதளம் NSG  தலைமையகத்தில் இருந்து செயல்பட்டு வந்தது. இதில் கறுப்புப் பூனை படைகள் குறித்த அடிப்படை தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த இணையதளம் ஹாக் செய்யப்பட்டதன் தகவல் தேசிய தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு தற்காலிக நடவடிக்கையாக இந்த தளம் முடக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.