தேசிய ஆங்கில மொழி பேச்சு போட்டி.. பாத்திமா ஷைரீன் முதலிடம். கொழும்பு இஸ்பத்தனா கல்லூரியினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட மீலாத் விழா ஆங்கில மொழி பேச்சு போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன் மௌலானா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை (17) தெஹிவல டீ.எஸ்.ஜெயசிங்க மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இம்மாணவி, சான்றிதழ் வழங்கப்பட்டு, தங்கப் பதக்கம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கல்வி அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் என்பன இணைந்து நடத்திய ஆங்கில மொழி மூல பேச்சுப் போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தையும் இவர் பெற்றிருந்தார்.

அதேவேளை கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 167 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ள இம்மாணவி, பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் முதலிடம், இரண்டாமிடம் பெற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு பெருமை ஈட்டிக் கொடுத்துள்ளார்.

இவர் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியைச் சேர்ந்த இனாம் ஷக்காப் மௌலானா- அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.By: இம்ரான் நைனார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.