ஜல்லிக்கட்டு போராட்டம்: தலைமை செயலகத்தில் டிஜிபி ராஜேந்திரனுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனைதமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் ஜல்லிக் கட்டு போட்டிகள் நடை பெறாமல் இருந்தது.

இந்த ஆண்டு பொங் கலையட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்படியும் நடைபெறும் என்று தமிழக மக்களும் ஜல்லிக்கட்டு ஆர் வலர்களும் காத்திருந்தனர். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இந்த பொங் கலுக்கும் ஜல்லிக்கட்டு மீதான தடை நீடித்தது. இருப்பினும் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.

விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கும், காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை மாடு கள் சேர்க்கப்பட்டதுமே ஜல்லிக்கட்டு போட்டிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

இந்த தடையை நீக்க மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை என்றும், அதன் காரணமாகவே இந்த பொங்கலுக்கும் 3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு மீதான தடை நீடிப்பதாகவும் அரசியல் கட்சியினரும் மாணவர்களும் குற்றம் சாட் டினர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர் கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பே தொடங்கிய மாணவர்கள் போராட்டம் சங்கிலி தொடர் போல நீண்டு கொண்டே செல்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக சமூக வலைதளங்கள் மூலமாகவே மாணவர்களும் இளைஞர்களும் ஆதரவு திரட்டினர். இந்த போராட்டத்துக்கு யாரும் தலைமை தாங்கி அழைப்பு விடுக்கவில்லை. இதுபோன்ற ஒரு சூழலில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை என அனைத்து பகுதிகளிலுமே மாணவர்கள் தாங்களாகவே திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
சென்னையில் மெரீனா கடற்கரையில் நேற்று காலை 7.30 மணி அளவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் திரள தொடங் கினர். மெரீனாவில் தொடங் கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதர வான இந்த தீப்பொறி, பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங் களில் வேகமாக பகிரப்பட் டது. இதனை பார்த்து நேரம் செல்ல... செல்ல, மாண வர்கள் அலை அலையாக மெரீனாவில் குவியத் தொடங்கி விட்டனர்.

இதனால் நேற்று காலை 11 மணி அளவில் மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரில் திரும்பிய திசையெல்லாம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தலையாகவே காட்சி அளித்தது. கட்டுக்கடங்காத கூட்டம் இதனை தொடர்ந்து பிற்பகலில் இளைஞர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிட்டது.

இதனையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் மெரீனாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் மெரீனாவில் திடீரென மின்சாரம் தடைபட்டது. மின் இணைப்பு துண்டிக்கப் பட்டதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும், மாணவர் களும் எந்தவித வன்முறைக் கும் இடம் கொடுக்காத வகையில் அமைதி காத்தனர்.

 போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 3 விதமான கோரிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
* தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக சட்டசபை கூட்டி ஜல்லிக்கட்டு நடத்து வதற்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
* தமிழக எம்.பி.க்கள் அனைவரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான அவசர சட்டத்தை இயற்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
* காட்சி படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து காளையை நீக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த 3 கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிlaiயில் இந்த போராட்டங்கL தொடர்பாக சட்டம் ஒழுங் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக  முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைமை செயலகத்தில்   டிஜிபி ராஜேந்ந்திர, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்  ஜார்ஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.