முத்துப்பேட்டையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கருப்பு, பேட்டை சிவா உட்பட பா.ஜ.க.வினர் கைதுமுத்துப்பேட்டையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பாஜக மாவட்ட மகளிர் அணி சார்பில் குடியரசு தினம் பேரணி நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் போலீஸ் தடையை மீறி ஊர்வலம் நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாலை பேரணியாக புறப்பட முத்துப்பேட்டை சிதேரிக்குளம் அருகில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா, மாவட்ட மகளிர் அணி தலைவி  மல்லிகா ஆகியோர் தலைமையில் மகளிர் அணியினர் திரண்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி அருண் பேரணிக்கு அனுமதி இல்லை நடத்தக்கூடாது என்று கூறினார். இருந்தும் மாவட்ட மகளிர் அணி தலைவி மல்லிகா தலைமையில் தேசிய கொடி ஏந்தியப்படி கோஷமிட்டு பா.ஜ.க. மகளிர் அணியினர் பேரணியாக புறப்பட்டனர்.

இதனையடுத்து போலீசார் தடுத்து நிறுத்தி மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா, மாவட்ட மகளிர் அணி தலைவி மல்லிகா, மாவட்ட நிர்வாகிகள் மரியம்பீவி, காந்திமதி, செந்தாமரை செல்வி, மாவட்ட பொதுச் செயலாளர் ராகவன், மாவட்ட செயலாளர் வினோத், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் உட்பட 90-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினரை கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில்,

சுதந்திர நாட்டில் நமது தேசிய கொடியை கையில் எடுத்து செல்ல போலீஸ் தடை செய்து உள்ளது கேவலமாக உள்ளது. இது யாரால்  தடை செய்யப்படுகிறது? எங்களை கைது செய்வது எந்தவிதத்தில் நியாயம்? தற்பொழுது தடைசெய்து கைது செய்யப்பட்டதால் ஒட்டு மொத்த கட்சியினரையும் திரட்டி விரைவில் பேரணி நடத்துவோம் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.