முத்துப்பேட்டையில் ஒப்பாரி போராட்டம்!முத்துப்பேட்டையில் பொதுமக்கள் வங்கியில் தேவைக்கு பணம் எடுக்கமுடியாததை கண்டித்து பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஒப்பாரி போராட்டம்!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை இணைந்து பொதுமக்கள் வங்கியிலும் ஏ.டி.எம் மிலும் உடன் தேவைக்கு தன் பணத்தை எடுக்க முடியாததை கண்டித்தும் அனைவருக்கும் உடன் பணம் கிடைக்க கோரியும் ஒப்பாரி போராட்டம் மன்னை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு முன்பு நடைப்பெற்றது. த.மு.எ.க.ச தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் செல்லத்துரை கோரிக்கை விளக்கி பேசினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரகுராமன் கண்டித்து பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜேந்திரன், நகர செயலாளர் காளிமுத்து, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், ஓய்வூதியர் சங்க தலைவர் உலகநாதன், வெற்றி தமிழர் பேரவை தலைவர் சுப.சிதம்பரம், மாதர் சங்க தலைவி வைதேகி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.