துபாய், கராமா மெடிக்கல் பிட்னஸ் சென்டர் சேவை கட்டணம் உயர்வு !துபையில் ரெஸிடென்ஸ் விசா அடிப்பதற்கு முன் துபை சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் எக்ஸ்பிரஸ் மெடிக்கல் பிட்னஸ் சென்டர்களில் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம்.

இந்த மெடிக்கல் பிட்னஸ் சென்டர்கள் சோனாப்பூர், முஹைஸ்னா, அல் பர்சா, கராமா ஆகிய பகுதிகளில் செயல்படுகின்றன. புதிதாக துபை ஹெல்த் கேர் சிட்டியிலும் ஒரு பிட்னஸ் சென்டர் 2017 ஜனவரி 4 முதல் துவக்கப்பட்டுள்ள நிலையில் கராமா சென்டரில் மட்டும் நிர்வாக சேவைகள் கட்டணம் என்ற பெயரில் தலா 100 திர்ஹம் உயர்த்தப்பட்டுள்ளது. இதர மெடிக்கல் பிட்னஸ் சென்டர்களில் பழைய கட்டணங்களே இன்னும் நீடிக்கின்றன.

48 மணிநேர மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்கு 430 திர்ஹமும், 34 மணிநேர மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்கு 530 திர்ஹமும், 4 மணிநேர விஐபி சேவைகளுக்கு 750 திர்ஹமும் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனி மேற்காணும் அனைத்து சேவைகளுக்கும் கூடுதலாக 100 திர்ஹம் சேர்த்து செலுத்த வேண்டும்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.