அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் இறுதி உரைஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிகாகோவில் நடைபெற்று வரும் தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் இறுதி உரையாற்றுகிறார். ஒபாமாவின் 8 ஆண்டுகால ஆட்சியின் கீழ் இந்தியா-அமெரிக்கா உறவு வலுவடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 ஆண்டுகள் அதிபராக நீடிக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கோஷமிட்டதற்கு ஒபாமா மறுப்பு தெரிவித்துவிட்டார். ஒவ்வொரு நாளும் உங்களிடம் இருந்து நான் அதிகமாக கற்றுக் கொண்டேன். என்னை நீங்கள் சிறந்த அதிபராகவும், மனிதனாகவும் மாற்றிவிட்டீர்கள் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையின் அடிப்படையில் தான் ஜனநாயகம் வளர்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் தொடங்கிய போது இருந்ததைவிட தற்போது அமெரிக்கா ஒரு நல்ல, வலுவான இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த சில வாரங்களாக நானும், எனது மனைவியும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறோம். அமெரிக்க மக்களுக்கு என் நன்றியை தெரிவிக்க வேண்டிய தருணம் இது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தவறான நபர்களை தேர்வு செய்து விட்டு பின்னர் வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் போது நிர்வாக ரீதியாக எந்த பிரச்சனையும் இருக்காது என்று உறுதி தருகிறேன். கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் எந்தவிதமான பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரிவினையை தூண்டுவதாகவே இனவாதம் உள்ளது என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.