ஹஜ் செய்திகள்: வரும் ஆண்டு முதல் பழையபடி கூடுதல் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி !2012 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளுக்கான ஹஜ் அனுமதியில் (Quota) 20 சதவிகிதமும் உள்நாட்டு பயணிகளில் 50 சதவிகிதமும் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம் ஹஜ் யாத்ரீகர்களுக்கான வசதிகளையும், பாதுகாப்பையும் உறுதிசெய்ய இயலும் என சவுதியின் உம்ரா மற்றும் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சகம் நம்பியது என்றபோதும் 2015 ஆம் ஆண்டு கட்டுப்படுத்தப்பட்ட சுமார் 20 லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் கலந்த கொண்டநிலையிலும் நடந்த விபத்துக்களில் சுமார் 700 பேர் மரித்ததை தொடர்ந்து பல நாடுகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹஜ் யாத்ரீகளுக்கான அனுமதியை குறைப்பதை தவிர்த்துவிட்டு ஹஜ் யாத்ரீகர்களை பாதுகாப்பதற்கான மாற்று வழிகள் குறித்து யோசிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

மீண்டும் 5 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பழைய அனுமதிக்கு (Quota) சவுதியின் உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரைகளுக்கான அமைச்சகம் திரும்பியுள்ளதை பெரிதும் வரவேற்றுள்ளார் சவுதிக்கான இந்திய தூதர் முஹமது நூர் ரஹ்மான் ஷேக் அவர்கள், இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 4 லட்சம் ஹஜ் விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும் ஆனால் 100,020 பேர்கள் இந்திய ஹஜ் கமிட்டி வழியாகவும், சுமார் 36,000 பேர் தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் மூலமும் ஹஜ் செய்ததாகவும் இனி 170,000 பேர் ஹஜ் கமிட்டி மூலம் பழையபடி ஹஜ் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Sources: Saudi Gazette / Khaleej Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.