துபாயில் உணவு வங்கி திட்டம்: சேக் முகமது பின் ராஷித் தொடங்கி வைத்தார்!இன்று (ஜனவரி 4) துபையின் ஆட்சியாளராக பதவியேற்ற 10வது ஆண்டின் துவக்கத்தை சிறப்பிக்கும் வகையில் 'உணவு வங்கி' (Food Bank) திட்டத்தை துவக்கி வைத்தார் ஷேக் முஹமது பின் ராஷித் அவர்கள், இதன் மூலம் வளைகுடா பகுதியில் உணவை வீணடிக்காத பிராந்தியமாக துபை உருவாக்கவுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

துபை அரசின் துணையுடன் செயல்படும் தர்ம அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்பட இருக்கும் இந்த உணவு வங்கி நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பண்ணைகள் என உணவுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தளங்களிலிருந்தும் மீதமாகும் கெடாத உணவுகள் திரட்டப்பட்டு, சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு தன்னார்வத் தொண்டர்கள், பங்களிப்பாளர்கள் உதவியுடன் அமீரகத்திற்குள்ளும், பிற நாடுகளிலும் தேவையுடையோருக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் செயல்படும் பல தொண்டு நிறுவனங்களுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளப்படும்.

மேலும் தேதி காலாவதியான (Date Expired), கெட்டுப்போன உணவுகளை (Inedible) கூட வீணடிக்காமல் மறுசுழற்சி (Recycle) செய்து உரம், ரசாயனம், மருத்துவ ஆய்வு போன்ற பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் துபை மாநகரம் பூஜ்ய உணவு விரய மாநகராக (Zero Food Wastage City) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 13 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள உணவுகள் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துபை மாநகராட்சி உணவு வங்கியின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.