முத்துப்பேட்டையில் முன் அறிவிப்பில்லாமல் வங்கி திடீர் இடமாற்றத்தால் வாடிக்கையாளர்கள் தவிப்புமுத்துப்பேட்டையில் முன் அறிவிப்பு இல்லாமல் வங்கி திடீர் இடமாற்றத்தால் வாடிக்கையாளர்கள் தவித்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மன்னை சாலை குமரன் கடைவீதியில் ஸ்டேட் பாங்க் கிளை செயல்பட்டு வந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர்  வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்நிலையில் வங்கியை கடந்த வாரம் திடீரென இடமாற்றம் செய்தனர். இதுகுறித்த விபரம் வாடிக்காளர் பலருக்கும்  முறையாக தெரிவிக்கப்படவில்லை. அழைப்பும் கிடையாது.  இந்த விபரமறியாத வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பழைய கட்டடத்தில் உள்ள போர்டும் மாற்றப்படவில்லை. இடமாற்றம் செய்யப்பட்டது குறித்த தகவல் பலகையும் அங்கு வைக்கப்படவில்லை. இதனால் வங்கி இடம்மாறியது தெரியாமல் அரசு அதிகாரிகள் உட்பட வாடிக்கையாளர்கள் பலரும் தவித்தனர்.இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், வங்கி இடமாற்றம் பற்றி அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் செய்யவில்லை. அவர்களது நட்பு வட்டாரத்துக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர். இன்னமும் முறையாக ஏடிஎம் செயல்படவில்லை.
வங்கி புதிய கட்டிடத்தில் மாற்றபட்டும் கூட பணியாளர்கள் பற்றாக்குறை சரி செய்யபடவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் பாதிக்கபட்டுள்ளனர் என்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.