ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதாவில் இருந்து மாநில இளைஞரணி நிர்வாகி விலகல்ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா மாநில இளைஞரணி துணை தலைவர் சத்தியபாமா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜனதா மாநில இளைஞரணி துணை தலைவர் சத்தியபாமா கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷமிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உணர்வு சம்பந்தப்பட்டது. அதனை தடை செய்வது நியாயமற்ற ஒன்று. தமிழர்களின் கலாச்சாரத்தையும், உணர்வையும் புரிந்து கொள்ளாத பா.ஜனதா கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். எனது மாநில இளைஞரணி துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.