சவூதியில் சட்டத்துக்கு புறம்பாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்பு!சவூதியில் விசா காலம் காலாவதியாகி சட்டவிரோதமாக தங்கியிருக்கும்(OVER STAYERS) வெளிநாட்டினர், உம்ரா, ஹஜ் மற்றும் விசிட் உள்ளிட்ட விசாவில் சவூதி வந்து விசா காலம் முடிந்த பின்பும் திரும்ப தமது நாட்டுக்கு செல்லாமல் சவூதியில் தங்கி பணிபுரிபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு, மூன்று மாத பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இன்று (ஜனவரி 15 2017) முதல் அமுலுக்கு வருகிறது. அதன்படி ஏப்ரல் 12 க்குள் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அனைவரும் அவரவர்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும். என்று சவூதி குடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் பிற கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட விதி மீறல்களால் அபராதம் விதிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு பொருந்தாது.

இக்காமா காலம் முடிந்து புதுப்பிக்காமல் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த பொது மன்னிப்பு பொருந்தும். இவர்கள் உரிய ஆவணங்களுடன்(கைரேகை உள்ளிட்டவைகள்) தொழிலாளர் அலுவலகத்தில் (labour office)  சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் தரும் ஆவணங்களை குடியுரிமை அலுவலகத்தில்(ஜவஜாத்) சமர்பித்தால் அங்கு ஃபைனல் எக்ஸிட் பணிகள் முடியும். பின்பு தத்தமது நாடுகளுக்கு திரும்பலாம். இந்த பொது மன்னிப்பு காலம் முடிந்த பின்பு மிகக் கடுமையான சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாரு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.