தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது பொன்.ராதாவிற்கு ஸ்டாலின் பதிலடிதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை யில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். கல்லூரியில் நூற்றுக்கணக் கான மாணவர்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். கல்லூரியில் நூற்றுக்கணக் கான மாணவர்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

மாணவர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். இல்லாத பட்சத்தில் தடையை மீறி நடத்துவது பற்றி தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.

பின்னர் அவரிடம், போகியோடு திராவிட கட்சிகளை ஒழித்துகட்டுவோம் என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் குறிப் பிட்டுள்ளதை பற்றி நிருபர் கள் கேள்வி எழுப்பினர். இதற்குபதில் அளித்த அவர் தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.