முத்துப்பேட்டையில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி!திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் காவல்துறை சார்பில் பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. முன்னதாக இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் சென்ற ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளியின் தாளாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். பேரணியை முத்துப்பேட்டை டி.எஸ்.பி அருண் துவக்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் சப்.இன்ஸ்பெக்டர் கபீர்தாஸ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், மோகன் மற்றும் காவல்துறையினர், பள்ளி மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். விழிப்புணர்வு பேரணி பிரிலியண்ட் பள்ளி அருகில் இருந்து புறப்பட்டு செம்படவன்காடு, பைபாஸ் சாலை, பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல், பழைய பேருந்து நிலையம், மன்னை சாலை உள்ளிட்ட வழியாக சென்று திரும்பியது.
படம் செய்தி
முத்துப்பேட்டையில் காவல்துறை சார்பில் பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து நேற்று நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி அருண் துவக்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார்

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.