இஸ்லாமியர்களுக்கு தடையில்லை: டிரம்ப் அந்தர் பல்டிஇஸ்லாமிய நாடுகளில் இருந்து அகதிகள் அமெரிக்காவிற்குள் வர விதிக்கப்பட்ட தடை இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு ட்ரம்ப், அதிரடி நடவடிக்கையாக, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்தார்.

மேலும், ஈராக், ஈரான், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய ஏழு நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி ட்ரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதற்கு விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எனது அறிவிப்பை அனைவரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் எந்த தடையும் விதிக்கவில்லை.

அமெரிக்கா பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என்ற பெருமையை பெற்றது. ஆகையால் அகதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கப்படும். உலகில் மொத்தம் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு இந்த உத்தரவால் எந்த பாதிப்பும் இல்லை.

நாங்கள் ஒரு சில பாதுகாப்பு தன்மைகளை உறுதிபடுத்திய பின் அனுமதி அளிக்கப்படும். இது மதம் சம்பந்தப்பட்ட முடிவல்ல, பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டில் ஒபாமாவும் ஈராக் அகதிகள் மீது ஆறு மாதங்கள் தடை விதித்து இருந்தார். அது போன்ற நடவடிக்கை தான் இப்போதும் எடுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும். ஆனாலும் மறுத்து செய்தி வெளியிடுகின்றன” என்று ட்ரம்ப் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.