முஸ்லிம் பெண்களின் இன்றைய நிலைமை!-கட்டுரைநைட்டிகளாக மாறும் புர்காகள் அணிந்தும் அணியாத நிர்வாண நிலை …

விலை கொடுத்து வாங்கி மாற்றான் கண்களுக்கு பிறந்த மேனியாய் விருந்தாகும் அவலம் அரங்கேறும் நவீன உலகம் ..

சொந்த தாய் , மகள் , சகோதரி ,மனைவி நிர்வாணமாக சுற்றுவதை பார்த்தும் கண்டிக்காது உறுதுணையாக இருக்கும் அனைத்து தந்தை , கணவன் , மகன் , சகோதரன் போன்றோர் மறுமையில் தப்பவே முடியாது . வீட்டில் உள்ளவர்களைத் தடுக்காத இவர்கள் ஆண்கள் என்று வீராப்பு பேசுவதற்கு அருகதை உள்ளவர்களா ?

ஊரில் இவ்வாறான மெல்லிய , இருக்கமான நைட்டி போன்ற புர்காகளை விற்பனை செய்வோர் இஸ்லாமிய கண்ணோடத்தில் விபச்சாரர்கள் என்ற

குற்றத்திற்கு ஆளாகின்றனர் என்பதே உண்மை . விற்பனையாளர்களே நீங்கள் இவ்வாறான கேவலம் கெட்ட புர்காகளை உங்களது சொந்த குமரிகளுக்கு
அணிவித்து அழகு தான் பாருங்களேன் .

நீங்கள் உங்ளது பிள்ளைகளுக்கு விரும்பாததை ஏன் வியாபாரம் என்ற பெயரில் மற்றவர்களின் உடல் அங்கங்களை உலகிற்கு காட்சிப் படுத்துகிறீர்கள் . முடிவாக கேட்பது யாதெனில் , பெற்றோர்கள்
இது குறித்து கூடிய கவணம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

மார்க்கம் உதறித்தள்ளப்பட்டு அந்நிய சக்திகள் ஊடுருவி எமது வாலிப சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன .

நபியவர்கள் கூறியது போல் ” ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே அவர்களது பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவார்கள்.”

எனவே எல்லோரும் இவ்விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து கேடுகெட்ட ஆடைப் பழக்கங்களிலிருந்து நம் இளம் பெண்களையும் ,இளஞர்களையும் காப்பாற்ற துஆ செய்வோம்!
  ( மார்க்கத்தின் உதவியாளன்)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.