புனித ஹரம் ஷரீஃப் கிரேன் விபத்து வழக்கு தள்ளுபடி !புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற கிரேன் விபத்தால் சுமார் 109 பேர் மரணமடைந்ததுடன் சுமார் 209 பேர் காயமடையவும்  செய்தனர். இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இவர்களில் 6 பேர் சவுதியர், 2 பாகிஸ்தானியர், எஞ்சியவர்கள் கனடா, ஜோர்டான், பலஸ்தீன், இமராத், எகிப்து மற்றும் பிலிப்பைன் என தலா நாட்டுக்கு ஒருவர். இவர்கள் குறித்த தனிப்பட்ட விபரங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடந்த 2016 ஆகஸ்ட் 26 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வரும் வழக்கில், பணியில் அலட்சியம் காரணமாக மரணம் சம்பவித்தல், பொது சொத்துக்களை நாசப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு விதிகளை மீறியது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லையென மறுத்து 13 பேர் மீதான வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் 13 பேர் என பட்டியல் சுருங்கியது ஏன் எனத் தெரியவில்லை. மேலும், அரசுத்தரப்பு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யும் என தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.