அதிரை அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி மரணம் !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ஆழ்குழாய் கிணறு அருகே பள்ளம் தோண்டியபோது, மண் சரிந்து விழுந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

அதிராம்பட்டினம் அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ச. ஆரோக்கியசாமி (70). இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள ஆழ்குழாய் கிணற்றிலிருந்த நீர்மூழ்கி மோட்டார் பழுதடைந்து விட்டதாம். அதை வெளியே எடுக்க முயன்றபோது நீர்மூழ்கி மோட்டார் ஆழ்குழாய்க்குள் சிக்கிக் கொண்டதாம். இதையடுத்து, அந்த மோட்டாரை வெளியே எடுப்பதற்காக ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பணியில் அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சி. நாடிமுத்து (45), கட்டையன் (35), சுந்தரராஜ் (32) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10 அடி ஆழ பள்ளத்துக்குள் நின்று மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருந்த நாடிமுத்து மீது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததாம். இதனால் மண்ணுக்குள் சிக்கிய நாடிமுத்து மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், ஏஎஸ்பி அரவிந்த் மேனன் ஆகியோர் சம்பவயிடத்தை பார்வையிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்து கிடந்த நாடிமுத்துவின் சடலம் வெளியே எடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.