வெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரிவதிக்க குவைத் எம்பிக்கள் எதிர்ப்பு !சவுதியை தொடர்ந்து குவைத்திலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்தின் மீது வரிவதிக்க வேண்டும் என குவைத் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் வியாழன் அன்று குவைத்தியர்களை விட எண்ணிக்கையில் மிகைத்து வாழும் வெளிநாட்டினரை குறைப்பது குறித்து சிறப்பு விவாதம் ஒன்று நடக்கவுள்ள நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆதரவு நிலையை சிலர் மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிவிதிப்பது பண கடத்தலுக்கே வழிவகுக்கும் என்றும், குவைத்தியர்களுக்கு அந்நியர்களுக்கும் என இருவேறு சட்டங்களை கடைபிடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றும், தங்கள் குடும்பத்தை பிரிந்து நமது நாட்டிற்காக உழைப்பவர்களுக்கு செய்யும் கைமாறு இதுவல்ல என்றும் கடுமையான எதிர்ப்பினை எழுப்பியுள்ளனர். வரும் வியாழன் அன்று குவைத் பாராளுமன்றத்தில் சூடு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.