நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் வீர விளையாட்டுகள்நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தங்களுடைய காலத்தில் ஒட்டக பந்தயம் வைத்து சிறந்த ஒட்டகத்தை தேர்வு செய்துள்ளார்கள். அம்பு விளையாட்டு, மல்யூத்தம் போன்ற வீரவிளையாட்டுகளை விளையாடியுள்ளார்கள். அதுவும் அதற்காக இரண்டு நாள்கள் ரம்ஜான், பக்ரித் பண்டிகை நாட்களை ஒதுக்கியுள்ளார்கள். இது அந்த இனத்தின் மரபு. அது மட்டும் அல்லாமல் அந்த மரபை கடத்த சொல்லியுள்ளார்கள்.

இது போல் தமிழ் இனத்தின் விளையாட்டு சல்லிகட்டு. இதற்கு ஆதாரங்கள்.
 பல இருக்கின்றன

தமிழ்நாட்டு இஸ்லாமியர்களே இது நம் இனத்தின் விளையாட்டு இதையும் மார்க்கத்தையும் குழப்பி கொள்ளவேண்டாம். இதோ ஆதாரம்:

இஸ்லாத்தில் மார்க்க வரையறைக்குட்டுபட்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டிய பண்டிகைகள் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள். இந்த நாட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளையாட்டுக்காக அல்லாஹ்வால் அருளப் பட்ட நாட்கள் என்றே கூறியுள்ளளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனாவாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே விளையாடுபவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள். அறி யாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட் களில்தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன் னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெரு நாள் ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை (விளையாடுவதற்காக) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

ஊல் : அஹ்மத் 13131

இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் விளையாடுவதற்கு அனுமதி அளித்த தோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய மனைவியோடு சேர்ந்து அதை நீண்ட நேரம் வேடிக்கையும் பார்த்துள்ளார்கள்.

பள்ளிவாயிலில் கருப்பு நிற வீரர்கள் விளையாடிக் கொண்டிருந் தார்கள். நபி(ஸல்) அவர்களோ என்னை அவர்களுடைய மேலாடை யால் மறைத்திருந்தார்கள். நான் சலிப்படையும் அளவுக்கு அவர்க ளின் விளையாட்டை பார்த்தேன். ஒரு பருவ வயதை அடைந்த சிறுமி விளையாட்டை பார்ப்பதற்கு எந்த அளவு ஆர்வமாக இருப்பாளோ அந்த அளவு (நான் பார்த்ததை) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 5236

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெறிந்து விளையாடக் கூடிய சிலரை கடந்து சென்றார்கள். "இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெறி யுங்கள்! ஏனென்றால் உங்கள் தந்தை அம்பெறிபவராகத்தான் இருந் தார். நீங்களும் எரியுங்கள் நான் இன்ன கூட்டதாருடன் சேர்ந்து கொள்கிறேன்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தினர் அம்பெறியாமல் நின்ற னர். நீங்கள் ஏன் அம்பெறியவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கேட் டார்கள். நீங்கள் அவர்களணியில் இருக்கும் போது நாங்கள் எப்படி அம்பெறிய முடியும் என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்பெறியுங்கள் நான் உங்கள் இருவரின் அணியுடனும் இருக்கிறேன் என்றார்கள்.

அறிவிப்பவர் : ஸலமா இப்னு அல் அக்வா(ரலி)

நூல் : புகாரி 2899

பி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

"யார் அம்பெறிவதை கற்றுக் கொண்டு பிறகு மறந்துவிடுகிறாரோ அவர் என்னை சார்ந்தவரில்லை.அவர் மாறு செய்துவிட்டார்''.

அறிவிப்பவர் : உக்பா (ரலி)

நூல் : முஸ்லிம் 3543

"நான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக் கிறேன். அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள். பிறகு என்னிடத் தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா! என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர் களை முந்தினேன். அப் போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது. நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப் பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென் றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக இது என்றார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மத் 25075

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலிரியவைக்கப்பட்ட (பயிற்சிய ளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே "ஹஃப்யா' எனும் இடத் திலிருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை "சனிய் யத்துல் வதா' எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை பந்தயம் வைத்தார்கள்.

(நூல் :புகாரி 420)

நபி (ஸல்) அவர்கள் ஸன்யதுல் விதா என்ற இடத்திலிருந்து ஹஃப்யா என்ற இடம் வரை 5 மைல்கள் சேனம் பூட்டப்பட்ட குதி ரையை குதிரை பந்தயத்தில் ஓட்டி சென்றார்கள். ஸனியாவிலிருந்து பனூ ஸுரைக்கின் பள்ளி வாயில் வரை 6 மைல்கள் சேனம் பூட்டப்ப டாத குதிரையை ஓட்டினார்கள்.

நபி(ஸல்) அவர்களுடைய ஒட்டகமான அழ்பாவை தோற்கடிக்க முடியாது என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து பலதடவைகள் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகப்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. இன்னும் நபி(ஸல்) சில விளையாட்டு போட்டிகளுக்கு குறிப்பிட்டு அனுமதி யும் வழங்கியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;

"வெற்றி பரிசு என்பது ஒட்டகப்பந்தயம், குதிரை பந்தயம், அம்பெறி வது இவைகளுக்கு தான் தகுதியானது''.

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத் 9754

இது ஒரு  முக நூல் பதிவு
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.