தமிழகம் தழைக்க வேண்டும் – மேலப்பாளையத்தில் முஸ்லிம்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகை!தற்போது வடகிழக்கு பருவ மழையில்லாததால், வறட்சியின் பிடியில் நெல்லை மக்கள் தவித்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக விவசாயிகள் மாண்டு வருகின்றனர்.

வற்றாத தாமிரபரணியும் இன்று வற்றிவிட்டது. அணைகள், ஏரிகள், குளங்களும் வற்றிவிட்டன. இதனால் பெரும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

பஞ்சத்திலிருந்து மக்களை காத்திடவும் மழை பெய்து பூமி செழித்திடவும் மழை வேண்டி சிறப்பு தொழுகை மேலப்பாளையத்தில் முஸ்லிம்கள் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

மஸ்ஜிதுல் ஹூதா ஜமாத் மற்றும் ஆல்இந்தியா இமாம் கவுன்சில் இமாம்கள் அமைப்பும் இணைந்து பஜார் திடலில் இன்று காலை 7 மணிக்கு நடத்தியுள்ளனர்.

இந்த தொழுகையில்,  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில துணைத்தலைவர் மீரான் அன்வாரி அவர்கள் சிறப்பு மழைத்தொழுகையை நடத்தினார். மஸ்ஜித்துல் ஹூதா ஜமாத் தலைவர் K.S சாகுல் ஹமீது உஸ்மானி  மழையின் அவசியத்தைப்பற்றி உரை நிகழ்த்தியுள்ளார்.

இதில், ஆயிரக்கணக்கானோர் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.