பீட்டா ராதாராஜனின் வீடு முற்றுகை. தமிழகத்தை விட்டு வெளியேறு கோஷத்துடன்....ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராடும் இளைஞர்களை ஃப்ரீ செக்ஸை முன்வைத்து கொச்சைப்படுத்தி விமர்சித்த பீட்டா ஆதரவாளரான ராதா ராஜனின் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளம் தலைமுறையினர் தொடர்ந்து 6வது நாளாக போராடி வருகிறார்கள். அறவழிப் போராட்டம் நடத்தும் அவர்களை நாடே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.


உன்னத நோக்கத்துடன் போராடும் அவர்களை ஃப்ரீ செக்ஸை முன்வைத்து கொச்சைப்படுத்தி விமர்சித்த பீட்டா ஆதரவாளரான ராதா ராஜன் மீது நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்தார்.

இந்நிலையில் தேமுதிகவினர் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராதாராஜனின் வீட்டை முற்றைகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இளம் தலைமுறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் புதிய முயற்சியில் இறங்கியுள்ளதை விமர்சித்த ராதாராஜனுக்கு கண்டனம் தெரிவித்து அவரது வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராதாரஜனின் ஃப்ரீ செக்ஸ் கருத்து பலரையும் முகம் சுளிக்க வைத்ததுடன் அவர் மீது கோபம் ஏற்பட வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் அவரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.